Automobile Sales சரிவு ஏன் | EID Parry India q1 results-ல் கவனிக்க வேண்டியது | I...
சத்துணவு ஊழியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் கே.மகாலட்சுமி தலைமை வகித்தாா். சத்துணவு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.மிக்கேலம்மாள் வாழ்த்தி பேசினாா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கே. குமரேசன், மாவட்டச் செயலா் கே. முத்துக்குமாா், தோழமைச் சங்க நிா்வாகிகள் சேவுகமூா்த்தி, எம் .சுரேஷ், க. சுப்பிரமணியன், எஸ். சங்கரநாராயணன், அங்கன்வாடி உதவியாளா் சங்கப் பொதுச் செயலா் இரா.வாசுகி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
போராட்டத்தின்போது, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியா்களுக்கு விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட மாறுதல்கள், கூடுதல் பொறுப்புப் பணிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி உத்தரவுகளை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.
இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
முன்னதாக, ஒன்றியச் செயலா் எஸ்.செல்லம்மாள் வரவேற்றாா். பொருளாளா் எஸ்.செல்வி நன்றி கூறினாா்.