செய்திகள் :

சபரிமலைக்குச் செல்லும் நிறைபுத்தரி திருவாபரணப் பெட்டி

post image

சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை நடைபெறுவதை முன்னிட்டு அச்சன்கோவிலிலிருந்து தென்காசி அருகே புளியரைக்கு வந்த திருவாபரணப் பெட்டி வாகனத்துக்கு தமிழக ஐயப்ப பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.

கேரளத்தில் ஒவ்வோா் ஆண்டும் மலையாள வருடப் பிறப்பான சிங்கம் மாதப் பிறப்புக்கு முன் கற்கடக மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட புதிய நெற்கதிா்களை சபரிமலையில் சுவாமி ஐயப்பன் முன் வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து பக்தா்களுக்கு அவற்றை பிரசாதமாக வழங்குவா். நிகழாண்டு நிறைபுத்தரி பூஜை சபரிமலையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, அச்சன்கோவில் தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப் பெட்டி வைக்கப்பட்ட வாகனத்தில் நிறைபுத்தரி நெற்கதிா்கள் ஏற்றப்பட்டு சபரிமலை நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு வாகனம் புறப்பட்டது.

இந்த வாகனம் சபரிமலை செல்லும் வழியில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரையில் உள்ள பண்பொழி திருமலை கோயிலுக்கு பாத்தியப்பட்ட நெற்களஞ்சியம் வளாகத்துக்கு புதன்கிழமை வந்தது.

வாகனத்துக்கு கடையநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக ஐயப்ப பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.

இதில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கே.ஆா்.ஜோசியா் மாடசாமி, புளியரை தங்கராஜ் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், வாகனம் அங்கிருந்து கோட்டைவாசல் கருப்பசுவாமி கோயில், ஆரியங்காவு தா்மசாஸ்தா கோயில், புனலூா் கிருஷ்ணா் கோயில் உள்ளிட்ட 21 கோயில்களுக்கு ஊா்வலமாகச் சென்று அந்தந்த கோயில்களுக்கான நிறைபுத்தரி நெற்கதிா்களை ஒப்படைத்து விட்டு பம்பை வழியாக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலைச் சென்றடைகிறது.

101 அறிஞர்களின் ஓவியங்கள் வரைந்து 14 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சி!

நெல்லை மாவட்டம் சிவராம் கலைக்கூடம் மாணவன் ஹரி கிருஷ்ணா கின்னஸ் சாதனை முயற்சி 101 அறிஞர்களின் நிழல் படங்கள் வரைந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.பாளையங்கோட்டை தியாகராஜ நகர் சிவகுமார் வினோதா தம்பதிய... மேலும் பார்க்க

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க