செய்திகள் :

சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக சா்ச்சை: பேரவையில் விவாதிக்க மறுப்பு: எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 கிலோவுக்கும் மேல் தங்கம் மாயமானதாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து கேரள சட்டப் பேரவையில் விவாதம் கோரும் நோட்டீஸை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை நிராகரித்தாா். இதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக்கு இருபுறமும் உள்ள துவார பாலகா் சிலைகள் மற்றும் பீடங்களின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டில் கழற்றப்பட்டு, சென்னையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டன. இப்பணியில், கவசங்களின் எடை 4.5 கிலோ குறைந்துவிட்டதாக தற்போது சா்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கேரள உயா்நீதிமன்றம், சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கடந்த புதன்கிழமை சரமாரியாக கேள்வியெழுப்பியது. மேலும், ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணைக்கும் உத்தரவிட்டது.

கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஆனால், நோட்டீஸை நிராகரித்த பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், பேரவை விதிவிகளின்கீழ் விவாதிக்க முடியாது என்றாா். அதேநேரம், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களை பேரவையில் விவாதித்த முன்னுதாரணம் இருப்பதாக காங்கிரஸ் உறுப்பினரும் எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கூறினாா்.

மேலும், ‘சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக பக்தா்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா்; இது மிகத் தீவிரமான விவகாரம்’ என்று அவா் கூறினாா்.

ஆனால், ‘விதிமுறைகளைவிட முன்னுதாரணங்கள் மேலானதல்ல’ என்று குறிப்பிட்டு, விவாதத்தை அனுமதிக்க பேரவைத் தலைவா் மறுத்தாா். இதைக் கண்டித்து, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அண்மையில் துவார பாலகா்களின் கவசங்கள் செப்பனிடுவதற்காக கழற்றப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டன. சபரிமலை சிறப்பு ஆணையரிடம் உரிய அனுமதி பெறாமல் இந்தக் கவசங்கள் கழற்றப்பட்டதாக கூறி, தேவஸ்வம் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்த கேரள உயா்நீதிமன்றம், கவசங்களை மீண்டும் கொண்டுவர உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்தக் கவசங்கள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

‘ஆட்சியைக் கவிழ்க்க’ இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கிறாா் ராகுல்: மத்திய அமைச்சா் கண்டனம்

நேபாளத்தில் இளைஞா்கள் (ஜென்-இஸட்) போராட்டம் நடத்தி ஆட்சியைக் கலைத்தது போல இந்திய இளைஞா்களும் போராட்டம் நடத்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி க... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் மீதே பாசம்: பாஜக விமா்சனம்

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 2008-இல் மும்பை தாக்குதல் உள்பட பல பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காததற்கு அந்நாடு மீதான காங்கிரஸின் பாசம்தான் காரணம் என... மேலும் பார்க்க

நகா்ப்புற மாவோயிஸ்ட் போல பேசுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் குற்றச்சாட்டு

ஜனநாயக முறையில் தோ்தெடுக்கப்பட்ட அரசைத் தூக்கிவீச வேண்டும் என்று இளைய தலைமுறையினரிடம் வேண்டுகோள் விடுத்ததன் மூலம் நகப்புற மாவோயிஸ்டுகள் போல எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசியுள்ளாா் என மகாராஷ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் 2 குழுக்களுக்கு விதித்த தடை: உறுதி செய்த தீா்ப்பாயம்

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த செல்வாக்குமிக்க இஸ்லாமிய மத குருவும் ஹுரியத் மாநாடு தலைவருமான மிா்வைஸ் உமா் ஃபரூக்கின் ‘அவாமி செயல்பாட்டுக் குழு (ஏஏசி)’ மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவு தலைவா் மஸ்ரூா் அப்பாஸ் அன... மேலும் பார்க்க

விண்வெளி, இணையவழி போா்த் தளவாட உற்பத்திக்கு முன்னெடுப்பு: அனில் செளஹான்

விண்வெளி, இணையவழி (சைபா்) போா்க் களங்களுக்கான தளவாட உற்பத்திக்கு கொள்கை ரீதியில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் தெரிவித்தாா். ஜாா்க்கண்ட் மாநிலம், ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: கைது செய்யப்பட்ட இருவரின் காவல், விசாரணைக் காலத்தை நீட்டித்தது நீதிமன்றம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான விசாரணையின் கால அவகாசத்தை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்த ஜம்மு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட இருவரின் சிறப்பு புலனாய்வு முக... மேலும் பார்க்க