இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி உற்சவ அம்பாள் மலா் அலங்காரத்தோடு தங்கக் கொடிமரம் முன் எழுந்தருள, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றப்பட்டது.
விழாவில் ஞாயிற்றுக்கிழமை மரக் கேடயம், பிப்.3 ஆம் தேதி மர சிம்ம வாகனம், பிப்.4 ஆம் தேதி மரபூத வாகனம், பிப்.5 ஆம் தேதி மர அன்ன வாகனம், பிப். 6 ஆம் தேதி மர ரிஷப வாகனம், பிப். 7 ஆம் தேதி மர யானை வாகனம், பிப். 8 ஆம் தேதி வெள்ளி சேஷ வாகனம், பிப்.9 ஆம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.
பிப். 10 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 11 ஆம் தேதி கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, வடதிருக்காவேரியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா். பிப்.11 ஆம் தேதி இரவு ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்பெறும் நிகழ்வும், பிப் 12 ஆம் தேதி மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.
கொடியேற்ற விழாவில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், பெ. பிச்சை மணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன், மற்றும் கோயில் மணியக்காரா் பழனிவேல் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.