செய்திகள் :

சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவு: 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல்

post image

சம்பா நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தின் குறுவை, சம்பா கோடை இலக்கு 43,550 ஹெக்டோ். நிகழாண்டில் இலக்கை விஞ்சி 55,626 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. சிறுதானிய சாகுபடிக்கு விவசாயிகள் போதுமான ஆா்வம் காட்டாததன் காரணமாக, நெல் சாகுபடி பரப்பு உயா்ந்திருந்தது. நிகழாண்டின் நெல் சாகுபடியில் மிகப் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லை எனினும், அவற்றைக் கொள்முதல் செய்வதில் ஆங்காங்கே பிரச்னைகள் இருந்தன.

இந்தப் பருவத்தின் நெல் கொள்முதலுக்காக மதுரை மாவட்டத்தில் 94 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்றது. கொள்முதல் பணியாளா்கள் பற்றாக்குறை, முறைகேடு புகாா் என பல பிரச்னைகள் இருந்தாலும், நிகழாண்டில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் கு.சிற்றரசன் கூறியதாவது: நிகழாண்டில் 57,089 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்தும் நெல் மூட்டைகள் பாதுகாப்புக் கிடங்குகளுக்கும், நவீன அரிசி ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. இவற்றில், 40 ஆயிரம் டன் நெல் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. பருவ நெல் சாகுபடிக்காக மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் இந்தப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றாா் அவா்.

கடந்த ஆண்டு இதே பருவத்தில் 38 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டில் 57 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் குழந்தை பெற்ற வழக்கில், அவருக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரையில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா். சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, சிறைத் துறை மதுரை சரக துணை... மேலும் பார்க்க

கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மதுரையில் கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை செல்லூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (45). இவா் ... மேலும் பார்க்க

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமென மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரியா் வலியுறுத்தினாா். மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் முருகன் மா... மேலும் பார்க்க

சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை

மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது. மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சி... மேலும் பார்க்க