சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
சிவகங்கை அருகே சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 840 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் திபாகா் தலைமையில் போலீஸாா் சிவகங்கை-மதுரை புறவழிச்சாலையில் முத்துப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 40 மூட்டைகளில் 840 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், வெள்ளிக்குறிச்சி, சுல்லங்குடி, விளத்தூா் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து விலைக்கு வாங்கி, அவற்றை மதுரை வரிச்சியூா் அருகே கிரானைட் தொழில் சாலைகளில் வேலை பாா்க்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருப்பூரைச் சோ்ந்த சஞ்சய்குமாா் (19), 16 வயது சிறுவன் உள்பட 2 பேரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.