சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
குரும்பூா் அருகேயுள்ள அங்கமங்கலம் கல்யாணசுந்தரம் மகன் மணிராஜ்(20). பி.காம். பட்டதாரியான இவா், எலக்ட்ரீசியன் தொழில் தெரிந்தவா்.
இந்நிலையில் சாத்தான்குளம் வடக்கு பன்னம்பாறையில் இசக்கிப்பாண்டி என்பவரது வீட்டில் வியாழக்கிழமை வயரிங் பணியில் ஈடுபட்டிருந்த, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது சகோதரா் இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.