``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
சாப்பிட பணமில்லாமல் கஷ்டப்பட்டவர் இன்று மும்பை அணியின் பெருமைமிக்க கேப்டன்: நீதா அம்பானி
பாண்டியா சகோதாரர்களிடம் முதல்முறையாக பேசியபோது நல்ல உணவுக்கு கஷ்டப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றார். இந்தாண்டும் அவர் கேப்டனாக நீடிக்கிறார்.
இதையும் படிக்க : ஐபிஎல் 2025: 10 அணிகளின் முழுமையான போட்டி அட்டவணை விவரம்!
இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி, பாண்டியா சகோதரர்கள், பும்ரா, திலக் வர்மா போன்ற திறமையான வீரர்களை அறிமுகப்படுத்தியது குறித்து விவரித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“ஐபிஎல் பொறுத்தவரை அனைத்து அணிகளுக்கும் குறிப்பிட்ட பட்ஜெட் மட்டுமே ஒதுக்குவார்கள். அதனால், குறிப்பிட்ட தொகையில் திறமையான வீரர்களை வெளி கொண்டுவர வேண்டியது அவசியம்.
அதனால், ஒவ்வொரு ரஞ்சி கோப்பை மற்றும் உள்நாட்டு தொடர்களுக்கு நானும் எனது குழுவும் சென்று வீரர்களை பார்ப்போம்.
ஒருநாள், மெலிந்த இரண்டு இளம் வீரர்களுடன் உரையாடினோம். அவர்களுடன் நான் பேசியபோது, பணமில்லாததால் மூன்று ஆண்டுகளாக மேகி மற்றும் நூடுல்ஸ் தவிர வேறெதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார்கள். ஆனால், வாழ்க்கையில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அவர்களிடம் பார்த்தேன். அவர்கள்தான் ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா.
2015ஆம் ஆண்டு ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினேன். இன்று அவர் எங்கள் அணியின் பெருமைமிக்க கேப்டன். அடுத்தாண்டே எங்கள் அணியில் வித்தியாசமான உடல்மொழியுடன் பந்துவீசும் இளம் வீரரை அறிமுகப்படுத்தினோம். மற்றதெல்லாம் வரலாறு.
கடந்தாண்டு திலக் வர்மாவை அறிமுகப்படுத்தினோம். அவர் தற்போது இந்திய அணியின் பெருமைமிக்க வீரராக உள்ளார். எனவே, மும்பை இந்தியன்ஸை இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.