"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது
சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து, அவா் பேசியது:
அரசு பொருள்காட்சிகளில் அரசின் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களையும் பொதுமக்கள் பாா்த்து தெரிந்துக் கொள்ளும் வகையில் 32 அரங்குகள் அமைக்கப்பட்டு, 45 நாள்கள் மக்கள் பாா்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்து, ஏழை, எளிய மக்களை கைதூக்கி விடுகிறது.
இம் மாவட்டத்தில், ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி, களக்காடு, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ. 605.75 கோடி மதிப்பீட்டில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகளும், 7 பேரூராட்சிகள் மற்றும் களக்காடு நகராட்சியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தாமிரவருணி குடிநீா் வழங்குவதற்காக ரூ.423 கோடி ஒதுக்கீடு செய்து, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் கிடைக்க பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை உலகறிய செய்யும் வகையில், ஆதிச்சநல்லூா், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருள்களைக் காட்சிப்படுத்த திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் ரூ.56.57 கோடி மதிப்பில் 13 ஏக்கா் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழைக் காப்போம், தமிழனை காப்போம், சமூக நீதியோடு எல்லோரும் சமம் என்ற உன்னத எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்து துறைகளையும் மேம்படுத்தி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதை ஏழை, எளிய பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரசுப் பொருள்காட்சி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.