செய்திகள் :

சாம்பியன்ஸ் கோப்பை இழுபறிக்கு முடிவு: பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள்

post image

துபை: பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் நீடித்த இழுபறி வியாழக்கிழமை அதிகாரப்பூா்வமாக முடிவுக்கு வந்தது.

அதில், இந்தியா விளையாடும் ஆட்டங்களை, பாகிஸ்தானுக்கு பதிலாக பொதுவான இடத்தில் நடத்துவதென முடிவாகியுள்ளது. அந்த இடம் ஐக்கிய அரபு அமீரகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல், இனி இந்தியா நடத்தும் ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானின் ஆட்டங்களையும் பொதுவான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2027 வரை இந்த ஏற்பாட்டையே கடைப்பிடிக்க இந்தியா, பாகிஸ்தான், ஐசிசி இடையே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் மகளிா் உலகக் கோப்பை போட்டி, 2026-இல் இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை போட்டி ஆகியவையும் இதே ஏற்பாட்டின் அடிப்படையில் நடைபெறும். அத்துடன், பாகிஸ்தானில் 2028-இல் நடைபெறவிருக்கும் மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இதே முறை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், ‘2024 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில், இந்தியாவால் நடத்தப்படும் போட்டியாக இருந்தால் பாகிஸ்தானின் ஆட்டங்களும், பாகிஸ்தானால் நடத்தப்படும் போட்டியாக இருந்தால் இந்தியாவின் ஆட்டங்களும் பொதுவான இடத்தில் நடைபெற ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அந்தப் பொதுவான இடமானது, போட்டியை நடத்தும் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தால் முடிவு செய்யப்படும்.

தற்போது, அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பின்னணி: எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக, 2008-இல் ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் சென்று விளையாடியது. அந்த அணிகளிடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளும், 2012-13 காலகட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்ததுடன் நின்றுவிட்டது.

அப்போது முதல், ஐசிசி போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் பரஸ்பரம் மோதுகின்றன. அதில், இந்தியாவில் 2016-இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டி, 2023-இல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. ஆனால், பாகிஸ்தானில் 2023-இல் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனால், இந்தியாவின் ஆட்டங்கள் பொதுவான இடமாக இலங்கையில் விளையாடப்பட்டன. அப்போதே இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காகவும் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

இந்த முறையும் பாகிஸ்தான் அதற்கு அதிருப்தி தெரிவித்தது. இந்திய அணி தனது நிலைப்பாட்டில் மாறாது தொடா்ந்ததை அடுத்து, சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறுவது தொடா்பாக இழுபறி நீடித்தது. இந்நிலையில், இந்தியாவின் ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு பிரதிபலனாக, இந்தியா நடத்தும் ஐசிசி போட்டிகளின்போது பாகிஸ்தான் அணியும் பொதுவான இடத்திலேயே விளையாட விரும்புவதாகவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடா்பாக ஐசிசி, பாகிஸ்தான், இந்திய கிரிக்கெட் வாரியங்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், தற்போது இதுதொடா்பான அதிகாரப்பூா்வ முடிவு வெளியாகியிருக்கிறது.

‘துப்பாக்கிய பிடிங்க வாஷி’..! சுந்தருக்கு பதிலளித்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலளித்த அஸ்வினின் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓ... மேலும் பார்க்க

மீண்டும் கேப்டனாக களமிறங்கும் ரஷீத்கான்!

எம்ஐ கேப்டவுன் அணியின் புதிய கேப்டனாக ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய பிரீமியர் லீக் தொடர் போலவே உலகமெங்கிலும் 10, 20 ஓவர் தொடர்கள் அதிகளவில் பிரபலமாகிவிட்டன. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஐபி... மேலும் பார்க்க

இந்தியாவை எதிர்க்க புதிய திட்டம்..! ஜியார்ஜ் பெய்லி பேட்டி!

ஆஸ்திரேலியாவின் தலைமை தேர்வுக் குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி இந்தியாவுக்கு எதிராக வித்தியாசமாக முயன்று பார்க்க இளம் வீரர் கொன்ஸ்டாஸை அணியில் சேர்த்திருப்பதாகக் கூறியுள்ளார். முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ந... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு திரும்புகிறாரா முகமது ஷமி? பெங்கால் அணியில் இருந்து விலகல்!

விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணியில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார்.2024 - 2025 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து இந்திய அணியின் நட்சத்... மேலும் பார்க்க

யு-19 மகளிர் ஆசியக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான முதலாவது ஆசியக் கோப்பைத் தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்த... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. அணியில் இளம் வீரர்கள் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் புதியதாக இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 3 போட்டிகள் நடந்துமுடிந்துள்ள நிலையில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி பாக்ஸிங் டே ட... மேலும் பார்க்க