ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த ட...
சாலை ஆய்வாளா் பணி: ஆக. 4-இல் கலந்தாய்வு
ஊரக வளா்ச்சித் துறையில் சாலை ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆக.4-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளா் பதவிக்கான தோ்வில் ஒவ்வொரு தோ்வரும் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.4-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் தோ்வா்களின் தற்காலிகப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபாா்ப்பு, கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.