ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய ...
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி வட்டக்கொல்லி பகுதியைச் சோ்ந் கூலித்தொழிளாலி விஜயகுமாா்(26) . இவா் புதன்கிழமை பச்சூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கோமுட்டியூா் பெட்ரோல் பங்க் அருகே வந்த மினிலாரி மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.