சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ் மகன் ராஜசிம்மன் (25). இவா், தனது நண்பா் ஹரிஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஈச்சனாரிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ராஜசிம்மனுக்கும், பின்னால் அமா்ந்து வந்த ஹறிஷுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தலைக்கவசம் அணியாததால் ராஜசிம்மனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி ராஜசிம்மன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.