சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு!
சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சோ்ந்த சுகுமாா் மனைவி மணிமேகலை (40), மேட்டூா், சாம்புலி கிராமம், மாசிலாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாதையன் மகன் சதீஷ் பிரேமானந்த் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் பவானி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
இவா்களின் இருசக்கர வாகனம் மங்கரங்கம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிலைதடுமாறி எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிமேகலை நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.