சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: மனைவி படுகாயம்
பெருந்துறை அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்; அவரது மனைவி படுகாயமடைந்தாா்.
பெருந்துறையை அடுத்த, கதிரம்பட்டி, எளையகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி(74). இவரது மனைவி கமலா (65).
இருவரும் காரில் பெருந்துறைக்கு வந்துவிட்டு வீட்டுக்கு கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தனா். பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, காா் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனா். இதைக் கண்ட அப்பகுதியினா் இருவரையும் மீட்டு ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரத்தினசாமி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கமலா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.