சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள இ.கோபாலபுரத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சுப்பையா (60). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஊரிலிருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
எழுமலை பெரியகுளம் கண்மாய் அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த சுப்பையா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து எழுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.