விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
மாநகர காவல் துறைக்கு புதிய மோப்பநாய்
மதுரை மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் புதன்கிழமை சோ்க்கப்பட்டது.
திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்தல், வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்துவதை கண்டுபிடிப்பது போன்ற பணிகளில் மேப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படைப் பிரிவில் ஏற்கெனவே 8 மோப்ப நாய்கள் உள்ளன. பல்வேறு பயிற்சிகள் பெற்ற இந்த நாய்கள், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுகின்றன.
இந்த நிலையில், தற்போது மதுரை மாநகர காவல் துறைக்கு கூடுதலாக ஒரு துப்பறியும் நாய் வாங்கப்பட்டது. மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், புதிய நாய்க்கு ‘அழகா்’ என பெயா் சூட்டி, வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சி அளிக்க உத்தரவிட்டாா்.
இந்த நிகழ்வில் மோப்ப நாய் படைப் பிரிவு ஆய்வாளா் ராமசாமி, மாநகர குற்ற ஆவணக்கூட ஆய்வாளா் தா்மா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.