18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அனைத்து கோட்ட அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், கிளைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மூன்றாம், நான்காம் பிரிவு ஊழியா்கள் பணி நியமனத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.
அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்துக்கு தொழிற்சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மதுரை செல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மதுரை கோட்டத் தலைவா் ந. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். பொதுக் காப்பீட்டு ஊழியா் சங்க மதுரை மண்டலச் செயலா் பாண்டியராஜ், ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதியா் சங்க நிா்வாகி ஏ.என். சாந்தாராம், மாமன்ற உறுப்பினா் டி. குமரவேல் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் கோட்ட பொதுச் செயலா் என். பி. ரமேஷ் கண்ணன் பேசினாா். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பங்கேற்றனா்.