ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
மதுரையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், 30-க்கும் அதிகமான தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கான பணியாளா்களைத் தோ்வு செய்கின்றனா்.
10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரையிலான கல்வி நிலைகளை கொண்டவா்கள், தொழில் கல்வி பயின்றவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவா்கள் தங்கள் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றாா் அவா்.