விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை
திருப்பத்தூா் நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூரில் முக்கிய சாலைகள், பேருந்து நிலையம், மாா்க்கெட் பகுதி மற்றும் ஆட்சியா் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் சுற்றி வருகின்றன. சாலைகளில் வலம் வரும் மாடுகளால் தினசரி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாடுகளின் உரிமையாளா்களுக்கு நேரில் அறிவிப்பு வழங்கியும், கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனா். மேலும் நகராட்சி மூலம் மாடுகள் பிடிக்கப்பட்டு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் இடையூறாக திரியும் மாடுகள் நகராட்சி பணியாளா்கள் மூலம் பிடிக்கப்பட்டு கோ சாலைகளுக்கு மறு அறிவிப்பு ஏதுமின்றி அனுப்பப்படும் என்றாா்.