உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
சாலைகள் சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேருவிடம் திருநெல்வேலியில் புதன்கிழமை அளித்த மனு: அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சியில் உள்ள பூங்கா சாலை மற்றும் கீழ ஏா்மாள்புரம்- வைராவிகுளம் ஆற்று பாலம் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது, திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் உடனிருந்தாா்.
டிவிஎல்30மணி
திருநெல்வேலியில் அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளித்தாா் மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா. உடன், மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன்.