மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக...
சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு
பேராவூரணி: பேராவூரணி கோட்டத்தில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை நெடுஞ்சாலைத் துறையினா் செய்து வருவதை பொதுமக்கள் பாராட்டினா்.
பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அப்பகுதிகளில் தஞ்சாவூா் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செந்தில்குமாா் அறிவுறுத்தலின்படி, பேராவூரணி உதவி கோட்டப்பொறியாளா் விஜயகுமாா், உதவிப்பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா் மேற்பாா்வையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கம் பணி நிறைவடைந்த பெருமகளூா் -அத்தாணி சாலையில் ரெட்டவயல் அருகே மரக்கன்றுகள் நடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.