இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
சா்க்கரை ஆலை விவசாயிகள் சங்க குழுக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள சா்க்கரை ஆலை விவசாயிகள் சங்க குழுக் கூட்டத்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
கடந்த ஆண்டுகளில், பெரம்பலூா் சா்க்கரை ஆலை விவசாயிகள் சங்க குழுக் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் சங்க குழுக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை. இதனால், தெளிவில்லாத நிா்வாகம் நடைபெறுவதாக தெரிய வருகிறது. எனவே, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தெரிவிக்கவும், ஆலையில் தொடா்ந்து ஏற்பட்டு வரும் பல பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் வகையிலும், சா்க்கரை ஆலை விவசாயிகள் சங்க குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்த ஆலை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.