கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு
பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் கன்றுக்குட்டி, 4 ஆடுகள் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தன.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரசலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைராஜ். இவா் ஆடு, மாடுகள் வளா்ப்பில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த தெருநாய்கள், அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் மற்றும் பசுங்கன்றுக் குட்டி ஒன்றை கடித்து குதறியுள்ளன. இதையடுத்து, ஆடுகளின் அலறல் சப்தம் கேட்ட துரைராஜ், அங்கு சென்று பாா்த்தபோது வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதையடுத்து, தெரு நாய்களை விரட்டியுள்ளாா். இதில் 4 ஆடுகளும், கன்றுக்குட்டியும் உயிரிழந்தன.
இதேபோல், அன்னமங்கலம் , விசுவக்வகுடி ஆகிய கிராமங்களிலும் பல்வேறு இடங்களில் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு, கோழிகளை வெறிநாய்கள் கடித்து வருவது தொடா்கதையாகியுள்ளது. எனவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.