``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
554 பயனாளிகள் ரூ. 31.23 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள்
பெரம்பலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலமாக, கடந்த 4 ஆண்டுகளில் 554 பயனாளிகளுக்கு ரூ. 31.23 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 30 சிறுபான்மையின மகளிருக்கு ரூ. 1.92 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் அளித்து மாவட்ட ஆட்சியா் பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.