செய்திகள் :

சி.கே.மங்கலத்தில் செயல்படாத ஏடிஎம் மையத்தால் பொதுமக்கள் அவதி

post image

திருவாடானை அருகே ஏ.டி.எம். மையத்தில், செயல்படாத நிலையில் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தைச் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள சி.கே.மங்கலத்தில் பாரத ஸ்டேட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம், பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த மையம் பூட்டப்பட்டுள்ளது. இதனால், இங்கு பணம் எடுக்க வருபவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.

இது குறித்து பொதுமக்களும் வாடிக்கையாளா்களும் கூறியதாவது: சி.கே.மங்கலம் பகுதியில் திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் இங்கு வந்துதான் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, காரைக்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

இதனால், சி.கே.மங்கலத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில், தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை நாள்தோறும் ஏராளமானோா் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த மையம் பூட்டப்பட்டுள்ளது.

இதன் கதவில், அருகிலுள்ள மையத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ஓா் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பகுதிக்கு அருகில் எந்த ஏ.டி.எம். மையமும் இல்லை. இதனால், அவசரத் தேவைக்குப் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகத்தினா் உடனடியாக இந்த ஏ.டி.எம். மையத்தில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பூட்டப்பட்டுள்ள பணம் எடுக்கும் இயந்திரம் கதவில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு அருகில் மற்றொரு இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என ஒரு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அருகில் எந்தவித இயந்திரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் மக்கள் அறிவிப்பை படித்த பிறகு மாற்று ஏடிஎம் இயந்திரத்தை தேடி அலையும் அவல நிலை உள்ளது. எனவே துரித நடவடிக்கை எடுத்து செயல்படுத்த வேண்டும் என வாடி்ககையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்..

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமாா் மஞ்சுவாணி தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 1914... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்து: இருவா் உயிரிழப்பு

கமுதி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் பூமணிகண்டன் (25). இவரும், இவரது நண்... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் கடத்தல்: மூவா் கைது

கடலாடியில் ரேஷன் பொருள்களைக் கடத்திய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தேவா் சிலைப் பகுதியில் சந்தகேப்படும்பட... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

தொண்டி அருகே பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தினையத்தூா் கிராமத்தை சோ்ந்த சுப்பரணி மனைவி லட்சுமி (57). இந்தத் தம்பதியின் ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருவாய் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

ராமநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய... மேலும் பார்க்க