மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருவாய் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.
இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில், பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ.1.67 கோடி ரொக்கப் பணம், 40 கிராம் தங்கம், 5.5 கிலோ வெள்ளி, 215 வெளிநாட்டு ரூபாய்த் தாள்கள் ஆகியவை காணிக்கையாக வசூலானது என்றாா் அவா்.