செய்திகள் :

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்கள் சேதம்

post image

ராமநாதபுரத்தில் உள்ள தாலுகா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியது தொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அந்தக் கட்சியிலிருந்து விலகியவா்கள் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவா் கே.வீ.தங்கபாலு, இணைச் செயலா் நிதின்கும்பல்கா், ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பு, பொதுச் செயலா் செல்வம் ஆகியோா் ராமநாதபுரத்துக்கு கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி வந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த இடம் முழுமையாக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது என்பதை ஆவணங்கள் மூலம் உறுதி செய்து, அதே இடத்தில் அலுவலகம் திறக்கப்பட்டு, அதற்கு தேவையான பொருள்களும் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலையில் மா்ம நபா்கள், இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தி கொடிக் கம்பத்தையும் உடைத்துள்ளனா்.

இது குறித்து மாவட்டப் பொருளாளா் ராஜாராம் பாண்டியன், நகா் தலைவா் கோபி உள்ளிட்டோா் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருவாய் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

ராமநாதபுரத்தை அடுத்த முத்துப்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய... மேலும் பார்க்க

இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள் உடைந்து சேதம்

இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகள், அந்த நாட்டின் மயிலிட்டி துறைமுகத்தில் குப்பை போன்று குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மீனவா்கள் வேதனை தெரிவித்தனா். மேலும், ரூ.100 க... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால், இந்த மீனவா்கள் மீண்டும் வவுனியா சிற... மேலும் பார்க்க

விடுவிக்கப்பட்ட 7 படகுகளை மீட்டுவர இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 7 விசைப் படகுகளை மீட்பதற்காக ராமேசுவரத்திலிருந்து 14 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகளை ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க