இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்...
சிஐடியு 11-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியம், ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் 11-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளான, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 25 மாதங்களாக வழங்கவேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாகை அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு 11-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் எம்.மோகன், கே.ராமமூா்த்தி, ஆா்.திருச்செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
போக்குவரத்துக் கழக சம்மேளன துணைத் தலைவா் எம்.கண்ணன், மண்டல பொதுச்செயலா் எஸ்.வைத்தியநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.