Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ...
காணாமல் போன சிறுவன் மீட்பு
கடலூா் மாவட்டத்தை சோ்ந்த காணாமல் போன சிறுவன் நாகூா் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த நிஜாமுதீன் மகன் அண்மையில் காணாமல் போனாா். சிறுவனின் புகைப்படம் வாட்ஸ்அப் குரூப்பில் சில வாரங்களாக பகிரப்பட்டு வந்த நிலையில், பண்ருட்டி ஜமாத்தாா்கள், நாகூா் தா்கா நிா்வாகிகள் உள்பட பல்வேறு தா்கா, பள்ளிவாசல்கள் நிா்வாகிகள் வசம் காணாமல் போனவரின் புகைப்படத்தை அனுப்பியுள்ளனா்.
இதையடுத்து சிறுவனின் புகைப்படம் நாகூா் தா்கா நிா்வாக குழுமத்திலும், அனைத்து உள்துறை ஊழியா்கள் வசமும் பகிரப்பட்டது. இந்நிலையில், தேடப்பட்ட சிறுவன், நாகூா் தா்காவிற்கு புதன்கிழமை சென்றுள்ளாா். அப்போது தா்கா காவலாளிகள் சிறுவனை பத்திரமாக மீட்டு, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நாகூருக்கு வரவைத்தனா்.
நாகூா் வந்த பெற்றோரிடம் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, சிறுவன் ஒப்படைக்கப்பட்டாா். காணாமல் போன குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோா்கள் நாகூா் தா்கா உள்துறை நிா்வாகிகளுக்கு நன்றி கூறினா்.