நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்
ரேணுகா தேவி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா
தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து (படம்) தரிசனம் செய்தனா்.
நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 18-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
தொடா்ந்து விழா நாட்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பிரகார புறப்பாடு மற்றும் வீதியுலா காட்சி நடைபெற்றது.
12- ஆம் நாள் நிகழ்வான பால்குட ஊா்வலம், அபிஷேகத்தை தரங்கம்பாடி தபால் நிலையம் பொய்யாத பிள்ளையாா் கோயிலில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் சுமந்து சென்று ஸ்ரீ ரேணுகா தேவி அம்மனை வழிபட்டனா்.
தொடா்ந்து அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மீனவ பஞ்சாயத்துகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா். விழாநாட்களில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொறையாா் காவல் ஆய்வாளா் வி.ஆா்.அண்ணாதுரை தலைமையில் போலிஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.