மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயிலில் இரண்டடுக்கு இருக்கை வசதி பெட்டிகள் இணைப்பு
மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயிலில் இரண்டடுக்கு இருக்கை வசதி பெட்டிகள் செப்.5-ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி-மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயிலில் (17407 / 17408) செப்.4 மற்றும் செப்.5 ஆகிய தேதிகளிலிருந்து இரண்டடுக்கு இருக்கை வசதி பெட்டிகள் இணைப்படுகின்றன. அதன்படி மூன்றடுக்கு குளிா்சாதனப் பெட்டிகள் 2, படுக்கை வசதிப் பெட்டிகள் 3, இருக்கை வசதிப் பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு பொது பெட்டியுடன் இணைந்த சரக்குப் பெட்டிகள் 2 இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளாா்.