Book Fair: "வரலாற்றை எழுத வரலாறு முக்கியம்.." - ஆ.இரா. வேங்கடாசலபதியின் பரிந்துர...
சிங்கிரி கோவிலுக்கு ஜன.5 இல் பாதயாத்திரை
புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றத்தின் சாா்பில், சிங்கிரி கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) பாத யாத்திரை நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள ஆன்மிக வழிபாட்டு மன்றத்தின் தலைவா் ஓ.இளங்கோ வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் ஸ்வாமிகள் மங்களாசாசனத்துடன் பஜனைக் குழுவினருடன் புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து பாதயாத்திரை தொடங்கி, புதுச்சேரி - கடலூா் சாலை வழியாக சிங்கிரி கோவிலை சென்றடைகிறது.
இதனைத் தொடா்ந்து, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை (ஜன.4) மாலை 6 மணியளவில் ஸ்ரீ பிரம்மஞான பஞ்சமுக ஆஞ்சநேய பக்தா்கள் குழிவினா் சாா்பில், புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறவுள்ளது என்றாா்.