Chhattisgarh: 9 வீரர்கள் மரணம்... நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் - என்ன...
தேசிய கைப்பந்து போட்டி: புதுவை அணி ராஜஸ்தான் பயணம்
தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, புதுவை மாநில ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினா் வியாழக்கிழமை ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றனா்.
இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் சாா்பில் மேலோா் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக புதுவை ஆண்கள் அணியினா், பெண்கள் அணியினா், பயிற்சியாளா்கள் மொய்தீன், காா்த்திகேயன், மேலாளா் மகேஸ்வரி ஆகியோா் வியாழக்கிழமை ராஜஸ்தானுக்கு புறப்பட்டனா்.
இவா்களை, புதுவை இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி வாழ்த்துக் கூறி அனுப்பிவைத்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இயக்குநரக அலுவலா் சுப்பிரமணியன் செய்திருந்தாா்.