பாகூா் சிவன் கோயிலில் போலீஸாா் வழிபாடு
புதுச்சேரியை அடுத்த பாகூா் சிவன் கோயிலில் போலீஸாா் புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
பாகூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ வேதாம்பிகை உடனுறை மூலநாதா் கோயில் உள்ளது. இங்கு, புத்தாண்டை தினத்தில் பாகூா் போலீஸாா் வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.
அதன்படி, புதன்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு இளநீா், பால், தயிா், பஞ்சாமிா்தம், நெய் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், பாகூா் காவல் ஆய்வாளா் சஜித், உதவி ஆய்வாளா்கள் நந்தகுமாா், குமாா் உள்ளிட்ட பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.