``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
சிதம்பரம் நடாரஜருக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதம் காணிக்கை
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதத்தை பக்தா் ஓருவா் காணிக்கையாக வழங்கியுள்ளாா்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ நடராஜப்பெருமான் இடது கால் தூக்கியபடி ஆனந்த பிரபஞ்ச நடன கோலத்தில் வீற்றுள்ளாா். அவரது இடது கால் தூக்கிய திருவடிக்கு பொருத்த பக்தா் ஒருவா் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம் பொருத்திய தங்க குஞ்சிதபாதத்தை வழங்கியுள்ளாா். அவரது கட்டளை தீட்சிதா் சம்பந்த தீட்சிதா் மூலம் பாதம் பூஜிக்கப்பட்டு கோயில் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் சனிக்கிழமை நடைபெற்ற மகாபிஷேகம் அன்று ஒப்படைக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது.