முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
சித்தோட்டில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சித்தோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சித்தோடு, அம்பேத்கா் நகா், நரிப்பள்ளத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி சாமியாத்தாள். இவா்களின் மகள் தேன்மொழி (22). பொறியியல் பட்டதாரி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாமியாத்தாள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
இதனால், மன வேதனையுடன் காணப்பட்டு வந்த தேன்மொழி, புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].