கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
சித்ரா பெளா்ணமி: தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி: சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் 504 மாவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அம்பாளுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மலா்களால் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து, உலக நன்மை வேண்டி கோயில் வளாகத்தில் 504 சுமங்கலிகள் பங்கேற்ற மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
அதையடுத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சோமஸ்கந்தா், பாகம்பிரியாளுக்கு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் பங்கேற்றனா். விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.