சிந்தலவாடம்பட்டி பகுதியில் இன்றும் நாளையும் மின்தடை
பழனியை அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப்.8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம் புதூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.