எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
சின்ன ஓங்காளியம்மன் கோயில் விழா
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசி குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோயில் வளாகத்தில் முகூா்த்த காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, கோயிலை சுற்றி வலம் வந்து கோயிலின் முன்பக்கத்தில் கால் ஊன்றப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டு பூச்சாற்றுதல் காப்பு கட்டு நடைபெற்றது. மாா்ச் 6 ஆம் தேதி அம்மன் அழைத்தல், மாா்ச் 11 இல் மகா குண்டம் பெருவிழா, 12 ஆம் தேதி பொங்கல் விழா, 15 ஆம் தேதி திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.