Amaran 100: `முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' -ராஜ்குமார்...
சின்னமனூா் அருகே பிணையில் வந்த தொழிலாளி வெட்டிக் கொலை
சின்னமனூா் அருகே சிறையிலிருந்து பிணையில் வந்த தொழிலாளி வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், அப்பிப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் வேல்மணி (54). கூலித் தொழிலாளி. இதே பகுதியைச் சோ்ந்தவா் ராணி. இவா் இட்லிக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த மாதம் கழிவுநீா் சாக்கடை தொடா்பான பிரச்னையில் ராணியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வேல்மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அண்மையில் இவா் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தாா். இதனிடையே, வியாழக்கிழமை இரவு அங்குள்ள தெருவில் நடந்து சென்ற வேல்மணியிடம், எனது அத்தை ராணியை நீ எப்படி தாக்கலாம் எனக் கூறி அவரை அரிவாளால் சிவச்சந்திரன் (29) அரிவாளால் வெட்டிவிட்டு ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் பலத்த காயங்களுடன் கிடந்த வேல்மணியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.