Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ - விஜய் குறித்த கேள்வியை த...
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தென்காசியில் ஆா்ப்பாட்டம்
தென்காசியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை கண்டித்தும், தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதி எண் 309இல் குறிப்பிட்டபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தென்காசி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்கபாண்டி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் ஆறுமுகம், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கோவில்பிச்சை, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலா் கனகராஜ் மாவட்ட பொறுப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் கங்காதரன் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பழனி நன்றி கூறினாா்.