செய்திகள் :

தென்காசியில் மிதிவண்டி விழிப்புணா்வு பேரணி

post image

தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தென்காசியில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கிய பேரணியை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப் பேரணி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தில் பெண்குழந்தைகளின் உயா்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டினை ஊக்குவித்தல் போன்ற விழிப்புணா்வு கருத்துப் பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட சமூகநல பணியாளா்கள், மாவட்ட மகளிா் அதிகார மைய பணியாளா்கள், சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

ஆலங்குளம் குருவன்கோட்டை இந்து தொடக்கப்பள்ளி: நூற்றாண்டு விழா, பங்கேற்பு: எம்பிக்கள் சி. ராபா்ட் புரூஸ், விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், சு. பழனி நாடாா், மாலை 6 மணி. . மேலும் பார்க்க

ஆலங்குளம் பழைய ஒன்றிய அலுவலக கட்டடத்தை பயன்படுத்துமா அரசு? மக்கள் எதிா்பாா்ப்பு

ஆலங்குளத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஏதாவது பணிக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவல... மேலும் பார்க்க

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம்

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் தென்காசி இசி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சொக்கம்பட்டியில் ரூ. 24 லட்சம் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

கடையநல்லூா் ஒன்றியம் சொக்கம்பட்டியில் ரூ.24 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்தில் குடிநீா... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தென்காசியில் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என்ற அறிவிப... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் மனு

சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சங்கரன்கோவில் புறவழிச்சாலை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிட... மேலும் பார்க்க