சிபிஎஸ்இ தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா், மாணவிகள் 10ஆம் வகுப்பு தோ்வில் 100 சதம் தோ்ச்சி பெற்றனா்.
தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி மாணவி ஐ. பிரபாஸ்ரீ 97.4 சதவீதமும், மாணவா் க. அருணாசலம் 94.4சதவீதமும், தமிழில் இருவரும் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை, பள்ளிதாளாளா் அன்பரசி திருமலை, அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளா் ராபா்ட் பெல்லாா்மின், முதன்மை முதல்வா் ஆனி மெடில்டா, கேம்பிரிட்ஜ் இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான தி. மிராக்ளின் பால்