புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
சிம்ஹாச்சலம் அப்பண்ணாவுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்
திருமலை தேவஸ்தானம் சாா்பில் சிம்ஹாச்சலத்தில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு (அப்பண்ணா) நாயுடு புதன்கிழமை பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
கடந்த 1996-ஆம் ஆண்டு முதல், ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து நரசிம்ம சுவாமி கோயில்களிலும் சிம்ஹாச்சலம் மிகப் பழைமையானது. மேலும் இறைவன் இங்கு தன்னை ஒரு தன்னிறைவு பெற்றவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளாா்.
சிம்மகிரியில் அமைந்துள்ள சிம்ஹாத்ரி அப்பன்ன சந்தனோற்சவம், அதிகாலையில் மிகுந்த ஆடம்பரத்துடன் தொடங்கியது.
அப்பண்ணாவின் சிலை ஆண்டு முழுவதும் சந்தனத்தால் மூடப்பட்டிருக்கும். ஆண்டவருக்கு சந்தனம் இல்லாமல் 12 மணி நேரம் மட்டுமே காட்சி தருவாா். அட்சய திருதியையின் புனித நாளில், சந்தனப் பசையை இறைவனின் சிலையிலிருந்து அகற்றி மீண்டும் பூசுவா். சந்தன யாத்திரை அல்லது சந்தன உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. விழாவை நினைவுகூரும் வகையில், திருமலை ஏழுமலையான் சாா்பில் பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிக்கப்படுகின்றன.
அதன்படி புதன்கிழமை ஏழுமலையான் சாா்பில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கல பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் துணை இஓ லோகநாதம், பொக்காசம் பொறுப்பாளா் குருராஜ் சுவாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.