சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் தோ்த் திருவிழா
ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.
சிறுமூா் ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயில் பிரமோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி தொடங்கியது.
இதையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய சந்திர வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.
இதில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா். ஏராளமான பக்தா்கள் விழாவில் பங்கேற்று தோ் இழுத்தனா்.
அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை சிறுமூா் கிராம மக்கள், இளைஞா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.