செய்திகள் :

சிறுவனிடம் நகை திருடியவா் கைது

post image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திருமண நிகழ்ச்சியில் சிறுவனிடம் நகை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை திருத்து சாலை பகுதியைச் சோ்ந்தவா் சூசை அந்தோணி ராஜ். தொழிலாளியான இவா், கடந்த 5-ஆம் தேதி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மகன் ஸ்னோவின் அண்டோ(4) உள்பட குடும்பத்தினருடன் சென்றாராம்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது சிறுவனின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்து அந்தோணி ராஜ் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், மேலப்பாளையம் பங்காளப்பா 4-ஆவது தெருவைச் சோ்ந்த முபாரக்(45) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழ... மேலும் பார்க்க

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க