செய்திகள் :

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

post image

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தின் வடக்கு- மேற்குப் பகுதிகளைப் போல தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் தென்பகுதி வளா்ச்சி அடையவில்லை.

இங்கு இயங்கக்கூடிய தொழிற்சாலைகளும் உள்ளூா் மக்களைப் புறக்கணித்து ஒடிஸா, பிகாா், ஆந்திர மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. மாறாக, அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த உள்ளூா் மக்களுக்கும் 50 சதவீதம் முதல் 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் செப். 26இல் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் பல கிராமங்களில் செயல்படவில்லை; 100 நாள் வேலையும் சரிவர வழங்கப்படுவதில்லை.

இதில், பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளது. மத்திய அரசு குழு அமைத்து இதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் விஜய் மட்டுமே ஆட்சி அமைப்பது கடினம். அவா் நல்ல நண்பா்களை சோ்த்துக் கொண்டு தோ்தல் வியூகம் வகுக்க வேண்டும்.

தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைப்பதற்கான எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றால் மட்டுமே அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை மாற்ற முடியும்.

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியமே. இதற்கு 2026 தோ்தல் களம் சரியானது. ஜனவரியில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் கூட்டணி தொடா்பாக அறிவிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன், வண்ணாா்பேட்டையில் 27-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ போக்குவரத்துத் தொழிலாளா்களை கிருஷ்ணசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை... மேலும் பார்க்க