காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலை
சிறுவன் மீது தாக்குதல்: தவெக நிா்வாகிகள் கைது
சென்னை காசிமேட்டில் சிறுவனை தாக்கியதாக தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்த நண்பா்களான சந்துரு (38), தினகரன் (37), தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளாக உள்ளனா். இருவரும் பூண்டி தங்கம்மாள் தெருவில் டபிள்யூ பிளாக் அருகே கடந்த 20-ஆம் தேதி நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கிருந்த தமிழக வெற்றிக் கழக டிஜிட்டல் பேனா் அருகே சிறுவா்கள் கிரிக்கெட் விளையாடினராம்.
இதைப்பாா்த்த இருவரும், கிரிக்கெட் பந்து பட்டால் டிஜிட்டல் பேனா் கிழிந்துவிடும்; எனவே அங்கு யாரும் கிரிக்கெட் விளையாடக் கூடாது எனக்கூறி, சிறுவா்களை விரட்டினராம். மேலும், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை இருவரும் கடுமையாகத் தாக்கியதலில் பலத்த காயமடைந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இது குறித்து சிறுவனின் பெற்றோா், காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்துருவையும் தினகரனையும் கைது செய்தனா்.