விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை
சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், உதகை மாா்க்கெட் பகுதியில் பஷீா் என்பவா் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சிறுவா்களுக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீஸாா் அந்தக் கடை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது 15 வயது சிறுவா்கள் சிலா் போலீஸாரை பாா்த்ததும் கையில் இருந்த புகையிலைப் பொருள்களை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனா்.
இதைத் தொடா்ந்து கடையில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பஷீரை 2023 அக்டோபா் 3-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செந்தில்குமாா், சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பஷிருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.செந்தில்குமாா் ஆஜரானாா்.